போடி பகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு. 
தேனி

போடி பகுதியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு

போடி பகுதியில் சனிக்கிழமை காலையிலேயே விறு விறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. 

DIN

போடி பகுதியில் சனிக்கிழமை காலையிலேயே விறு விறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்றது. 

தேனி மாவட்டம், போடி நகராட்சியில் 33 வார்டுகளுக்கும் மேலச்சொக்கநாதபுரம், போடி மீனாட்சிபுரம், தேவாரம் பேரூராட்சிகளிலும் காலை 7 மணி முதலே வாக்குப்பதிவு நடைபெற்றது. பெண் வாக்காளர்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

ஒரு சில வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. போடி நகராட்சி பகுதியில் வாக்குச்சாவடிகளில் சக்கர நாற்காலி வசதி செய்யப்படாததால் வாக்களிக்க வந்த முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க நீண்ட தூரம் நடந்து சென்று சிரமத்துடன் வாக்களித்து சென்றனர்.

பல வார்டுகளில் வேட்பாளர்கள் வாக்குச்சாவடி அருகிலேயே நின்று ஆதரவு கேட்டனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. போடி பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT