தேனி

கர்னல் பென்னிகுயிக் மணிமண்டபம் 181 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அலங்கரிப்பு

DIN

தேனி மாவட்டம் லோயர் கேம்பில் உள்ள கர்னல் ஜான் பென்னிகுயிக் பிறந்தநாள் விழா சனிக்கிழமை அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது அதற்காக மணிமண்டபம் வெள்ளிக்கிழமை மின்னொளியில் ஜொலித்தது.

முல்லை பெரியாறு அணையை கட்டிய இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பொறியாளர் கர்னல் ஜான் பென்னிகுயிக் கட்டிய அணையால் தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட மக்கள் குடிநீர் மற்றும் பாசனத்திற்காக பயன்படுத்துகின்றனர்.

மேலும் ஐந்து மாவட்டங்களிலும் கர்னல் ஜான் பென்னிகுவிக் நினைவைப் போற்றுகின்றனர். ஆண்டுதோறும் ஜனவரி 15 அவரது பிறந்தநாளை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

மேலும் தமிழக அரசு லோயர் கேம்ப்பில் அவருக்காக முழு உருவ வெண்கலச் சிலை, மணிமண்டபம் அமைத்து அவரது பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடி வருகிறது.

சனிக்கிழமை நடைபெறும் அரசு விழாவில் தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார். உடன் பெரியகுளம், ஆண்டிபட்டி, கம்பம் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT