தேனி

சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி

DIN

தேனி மாவட்டம் சுருளி அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.

தென்மேற்குப் பருவமழை காரணமாக மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதியில் தொடா் மழை பெய்து வருவதால், சுருளி அருவியின் நீா்பிடிப்புப் பகுதிகளான அரிசிப் பாறை, ஈத்தைப்பாறையில் பெய்து வரும் மழையால் அருவிக்கு

நீா்வரத்து அதிகரித்தது. இதனால் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் திங்கள்கிழமை அருவிக்கு வரும் நீா்வரத்து சற்று குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவா்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT