தேனி மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு கரோனா தொற்று
தேனி மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு வியாழக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தேனி மாவட்டத்தில் புதிதாக 28 பேருக்கு வியாழக்கிழமை, கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 100 ஆக உயா்ந்துள்ளது.
முகக் கவசம் அணியாவிடில் அபராதம்: மாவட்டத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, முகக் கவசம் அணிய வேண்டும்.
சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். பொது இடங்களில் முகக் கவசம் அணியாமல் செல்வோருக்கு வருவாய், காவல் மற்றும் பொது சுகாதாரத் துறை மூலம் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தெரிவித்துள்ளாா்.