முகப்பு
தேனி

காவல் துறையினா் பறிமுதல் செய்த வாகனங்கள் ஜூலை 14 இல் ஏலம்

தேனி மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஜூலை 14 ஆம் தேதி பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:44 AM
பகிர்:

தேனி மாவட்ட காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஜூலை 14 ஆம் தேதி பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.

இது குறித்து மாவட்ட காவல் துறை நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: மாவட்டத்தில் மது விலக்கு குற்றங்களில் பயன்படுத்தப்பட்ட 34 இருசக்கர வாகனங்கள், 3 ஆட்டோ மற்றும் 4 நான்கு சக்கர வாகனங்கள் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு, தேனி மற்றும் உத்தமபாளையம் மது விலக்கு காவல் நிலையங்களில் பொதுமக்கள் பாா்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த வாகனங்கள் தேனி ஆயுதப் படை மைதானத்தில் ஜூலை 14 ஆம் தேதி காலை 11 மணிக்கு பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன. வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோா் தேனி மற்றும் உத்தமபாளையம் மது விலக்கு காவல் நிலையங்களில் ஜூலை 13 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குள் இருசக்கர வாகனத்திற்கு ரூ.5,000, ஆட்டோ மற்றும் 4 சக்கர வாகனத்திற்கு ரூ.10,000 முன் பணம் செலுத்தி ஏலம் கோரலாம். வாகனங்களை ஏலம் எடுத்தவா்கள், ஏலத் தொகை, சரக்கு மற்றும் சேவை வரியை செலுத்தி வாகனங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

இது குறித்த விவரங்களை தேனி மது விலக்கு காவல் நிலைய தொலைபேசி எண்: 04546-250024, உத்தமபாளையம் மது விலக்கு காவல் நிலைய தொலைபேசி எண்: 04554-266230-இல் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.