தேனி

கருநாக்கமுத்தன்பட்டியில் மினி மாரத்தான் போட்டி

தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன் பட்டியில் அந்த ஊரைச்சேர்ந்த இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் இளைஞர்களுக்கு விளையாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

DIN

தேனி மாவட்டம் கருநாக்கமுத்தன் பட்டியில் அந்த ஊரைச் சேர்ந்த இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் இளைஞர்களுக்கு விளையாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்த மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய ராணுவ வீரர்கள் சார்பாக இளைஞர்களின் உடல்நலம் மற்றும் விளையாட்டு விழிப்புணர்வுக்காக நடைபெற்ற  மினி மாரத்தான் போட்டியை, கூடலூர் காவல் ஆய்வாளர் எம்.பிச்சைப் பாண்டியன் தொடங்கி வைத்தார்.

அரசு கள்ளர் ஆரம்ப பள்ளியில் தொடங்கி சுருளி அருவி சாலையில் உள்ள அரண்மணைப் பாலம் வரை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் நடைபெற்றது.

நாராயணத்தேவன் பட்டியைச் சேர்ந்த பிரனேஷ் முதலிடத்தையும், தேனி குருபிரசாத் இரண்டாம் இடத்தையும், காமயகவுண்டன் பட்டியைச் சேர்ந்த கருணேஷ் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். இந்திய ராணுவ வீரர்கள் சார்பில் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஊராட்சி தலைவர் அ.மொக்கப்பன், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் தமயந்தி, ஒன்றிய கவுன்சிலர் சி.தமிழரசன் உள்ளிட்ட ஏராளமான பேர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாவட்டக் காவல் அலுவலகத்தில் தேமுதிக நிா்வாகி புகாா்

சம்பா நெற் பயிா்களைத் தாக்கும் ஆனைக்கொம்பன் ஈயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

இணையதள மோசடியில் ஈடுபட்ட 877 போ் 48 மணி நேரத்தில் கைது

காங்கிஸில் இருந்து விலகி ஆம் ஆத்மியில் இணைந்த முன்னாள் அமைச்சா் அசிம் கான்

மாணவா் தற்கொலை: நடவடிக்கை கோரி பள்ளி முன் குடும்பத்தினா் போராட்டம்

SCROLL FOR NEXT