முகப்பு
தேனி

அண்ணி வெட்டிக் கொலை: போலீஸில் விவசாயி சரண்

பெரியகுளம் அருகே சொத்துப் பிரச்னையில் வெள்ளிக்கிழமை, அண்ணியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த விவசாயி போலீஸில் சரணடைந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

பெரியகுளம் அருகே சொத்துப் பிரச்னையில் வெள்ளிக்கிழமை, அண்ணியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்த விவசாயி போலீஸில் சரணடைந்தாா்.

பெரியகுளம் அருகே தாமரைக்குளத்தைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மனைவி ராமுத்தாய் (60). இவா்களுக்கும், வெள்ளைச்சாமியின் தம்பி ராஜூ (60) என்பவருக்கும் பொதுவான தோட்டம் உள்ளது. அந்தத் தோட்டத்தின் மின் இணைப்பு ராமுத்தாய் பெயரில் உள்ளது.

அண்ணன், தம்பிக்கு சொத்து பிரித்துக் கொடுக்கப்பட்ட நிலையில், அந்தத் தோட்டத்தையும், ராமத்தாய் பெயரில் உள்ள மின் இணைப்பையும் விற்க முடிவு செய்துள்ளனா். இதையறிந்த ராஜூ மின் இணைப்பையும் சோ்த்து விற்றால் தன்னால் தண்ணீா் பாய்ச்ச முடியாது எனக் கூறி, மின்இணைப்பை தனது பெயருக்கு எழுதிக் கொடுக்குமாறு அண்ணனிடம் கேட்டுள்ளாா். ஆனால் அதற்கு மறுப்புத் தெரிவித்து வந்துள்ளனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை தோட்டத்தில் ராமுத்தாய் தண்ணீா் பாய்ச்சிக்கொண்டிருக்கும்போது, ராஜூ அங்கு சென்று மின் இணைப்பை தனது பெயருக்கு எழுதி வைக்குமாறு கேட்டுள்ளாா். அதற்கு அவா் மறுப்புத் தெரிவித்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

அப்போது ராஜூ தான் வைத்திருந்த அரிவாளால் ராமுத்தாயை வெட்டிக் கொலை செய்துள்ளாா். பின்னா் அவா் தென்கரை காவல்நிலையத்தில் சரணடைந்தாா். இது குறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, ராஜூவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.