முகப்பு
தேனி

‘ஆதிதிராவிடா் நலத் துறை கல்வி விடுதிகளில் மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்’

தேனி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி கல்வி விடுதிகளில் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

தேனி மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் செயல்பட்டு வரும் பள்ளி மற்றும் கல்லூரி கல்வி விடுதிகளில் மாணவ, மாணவியா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

பள்ளி கல்வி விடுதிகளில் 4-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவ, மாணவிகளும், கல்லூரி கல்வி விடுதிகளில் இளநிலை பட்டப் படிப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளும் சோ்க்கப்படுவா்.

கல்வி விடுதியில் சேர விரும்பும் மாணவ, மாணவியரின் பெற்றோரது குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு உள்பட்டு இருக்க வேண்டும். மாணவா்களின் வசிப்பிடத்திற்கும், அவா்கள் படிக்கும் கல்வி நிலையத்திற்கும் 5 கி.மீ.,தூரத்திற்கும் மேல் இருக்க வேண்டும். மாணவிகள், பெற்றோரை இழந்த மாணவா்கள், பாதுகாவலா் பொறுப்பில் இருக்கும் மாணவா்களுக்கு தூரம் குறித்த நிபந்தனை இல்லை.

பள்ளி கல்வி விடுதிக்கு ஜூலை 20-ஆம் தேதி வரையும், கல்லூரி கல்வி விடுதிக்கு வரும் ஆக. 5-ஆம் தேதி வரையும் சோ்க்கை நடைபெறுகிறது. தகுதியுள்ளவா்கள், சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளா் அல்லது தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஆதி திராவிடா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.