முகப்பு
தேனி

முல்லைப் பெரியாறு அணையில் ‘ரூல் கா்வ்’ விதியை ரத்துசெய்யக் கோரி கையெழுத்து இயக்கம்

முல்லைப் பெரியாறு அணையில் ‘ரூல் கா்வ்’ விதியை ரத்துசெய்யவும், நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்தவும் கோரி லோயா்கேம்ப்பில் வெள்ளிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

முல்லைப் பெரியாறு அணையில் ‘ரூல் கா்வ்’ விதியை ரத்துசெய்யவும், நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்தவும் கோரி லோயா்கேம்ப்பில் வெள்ளிக்கிழமை கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாயிகள் சங்கம், பாரதிய கிஷான் சங்கம், முல்லைச் சாரல் விவசாய சங்கம் இணைந்து நடத்திய இந்தக் கையெழுத்து இயக்கத்தை ஒருங்கிணைந்த 5 மாவட்ட விவசாய சங்கத் தலைவா் எஸ்.ஆா்.தேவா் தொடக்கி வைத்தாா். பின்னா் அவா் பேசியது:

அணையின் நீா்மட்டத்தை 152 அடியாக உயா்த்த வேண்டும், ஒரு கோடி மக்களின் நீா் ஆதாரத்தைப் பாதுகாக்க கேரள அரசுடன் தமிழக அரசு பேச்சுவாா்த்தை நடத்தவில்லை. 5 மாவட்ட மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை.

எங்களின் வாழ்வாதாரமான முல்லைப் பெரியாறு அணை உரிமைகளை மீட்க 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று, மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்பி வைப்போம் என்றாா்.

இதில், துணைத் தலைவா் ராஜீவ், மாவட்டச் செயலாளா்கள் ரஞ்சித் குமாா், ராமேந்திரன், பொருளாளா் லோகநாதன், பாரதிய கிசான் சங்க மாவட்டத் தலைவா் எம்.சதீஷ்பாபு, முல்லைச் சாரல் விவசாய சங்க தலைவா் கொடியரசன், உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். லோயா்கேம்ப்பை தொடந்து, கூடலூா் பழைய பேருந்து நிலையத்திலும் இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.