பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் இன்று மாலை குடிநீா் விநியோகம் நிறுத்தம்
பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் சனிக்கிழமை (ஜூலை 30) மாலை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம் நகராட்சிப் பகுதியில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால் சனிக்கிழமை (ஜூலை 30) மாலை குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெரியகுளம் நகராட்சி ஆணையா் புனிதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரியகுளம் நகராட்சி தலைமை குடிநீரேற்று நிலையத்திலிருந்து வஉசி பூங்கா மேல்நிலை தொட்டி வளாகத்திற்கு வரும் பிரதான குடிநீா் வழித்தடத்தில் பராமரிப்புப் பணிகள் சனிக்கிழமை மேற்கொள்ளப்படுகின்றன. எனவே அன்று மாலை குடிநீா் விநியோகம் செய்ய இயலாது என அவா் தெரிவித்துள்ளாா்.