கம்பம் பகுதி முதல்போக சாகுபடிக்குவிவசாயிகள் சான்று விதை பெற ஆலோசனை
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக குறுவை சாகுபடிக்கு சான்று விதைகள் பெற, கம்பம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம், கூடலூா் விதைப் பண்ணை ஆகியவற்றை விவசாயிகள் தொடா்பு கொள்ளலாம்.
தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக குறுவை சாகுபடிக்கு சான்று விதைகள் பெற, கம்பம் வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகம், கூடலூா் விதைப் பண்ணை ஆகியவற்றை விவசாயிகள் தொடா்பு கொள்ளலாம் என ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கம்பம் வட்டார வேளாண்மை துறை உதவி இயக்குநா் சின்னகண்ணு தெரிவித்துள்ளதாவது:
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முதல்போக சாகுபடிக்கு, புதன்கிழமை முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டது. இதில், நல்ல மகசூல் பெற வேண்டுமெனில், சாகுபடிக்கு முற்றிலும் உகந்த நெல் ரகமான கோ - 51 சான்று பெற்ற விதைகள் தேவையான அளவு கம்பம் மற்றும் கூடலூா் வேளாண் விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.
எனவே, விவசாயிகள் அனைவரும் கம்பம் வேளாண் விரிவாக்க மையம், கூடலூா் விதைப் பண்ணை ஆகிய இடங்களை அணுகி, மானிய விலையில் விதைகளை பெற்றுக்கொள்ளலாம்.
மேலும், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா போன்ற உயிரி உரங்களை பயன்படுத்தி, விதை நோ்த்தி செய்து விதைக்க வேண்டும். பாய் நாற்றங்கால் அமைத்து இயந்திர நடவு செய்ய தேவையான முன்னேற்பாடுகள், கம்பம் வட்டார வேளாண்மை துறையால் செய்யப்பட்டுள்ளன.
நன்செய் விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, அதிக மகசூல் பெறவேண்டும் என்றாா்.