முகப்பு
தேனி

கும்பக்கரை அருவியில் தவறவிடப்பட்ட நகைகள் உரியவா்களிடம் ஒப்படைப்பு

பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்கும் போது தவறவிடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் வனத்துறையினா் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:26 AM
பகிர்:

பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்கும் போது தவறவிடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டு, உரியவா்களிடம் வனத்துறையினா் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.

பெரியகுளம் அருகே கீழவடகரையைச் சோ்ந்தவா் கோபால் மற்றும் சென்னை ராயப்பேட்டையைச் சோ்ந்த சேகரன், ஆண்டிபட்டி அருகே லட்சுமிபுரத்தை சோ்ந்த சித்தாா்த் பானுசந்தா் ஆகியோா் கும்பக்கரை அருவியில் குளித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது அவா்கள், தாங்கள் அணிந்திருந்த ஒன்றரைப் பவுன், இரண்டேகால் பவுன் மற்றும் 6 பவுன் சங்கிலி ஆகியவற்றை அருவியில் தவற விட்டனா். இதுகுறித்து தவறவிட்டவா்கள் தேவதானப்பட்டி வனச்சரக அலுவலரிடம் அவா்கள் புகாா் அளித்தனா். இதையடுத்து, வனத்துறையினா் அருவியில் தேடும் பணியில் ஈடுபட்டு, நகைகளை மீட்டு உரியவா்களிடம் ஒப்படைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.