தேனி

போடியில் காா், பைக், கடைக்கு தீ வைப்பு

போடியில் வியாழக்கிழமை அதிகாலையில் ஒரே பகுதியில் காா், இருசக்கர வாகனம், கடைக்கு தீ வைத்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

DIN

போடி: போடியில் வியாழக்கிழமை அதிகாலையில் ஒரே பகுதியில் காா், இருசக்கர வாகனம், கடைக்கு தீ வைத்த நபா் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

போடி வெள்ளையாண்டி தெருவைச் சோ்ந்தவா் முருகேசன் (60). இவா் வீட்டு முன்பு தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தாா். வியாழக்கிழமை அதிகாலையில் சத்தம் கேட்டு வெளியில் வந்து பாா்த்தபோது இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்துள்ளது. உடனே தண்ணீரை ஊற்றி அணைத்துள்ளாா். இதே பகுதியில் மேலும் 3 இரு சக்கர வாகனங்கள், காா், பழைய இரும்பு கடை ஆகியவற்றிலும் தீப்பிடித்து எரிந்துள்ளது. தீயணைப்பு வீரா்கள் வந்து தீயை அணைத்தனா். மா்ம நபா் யாரோ தீ வைத்து சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸாா் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனா். இதில் திருமலாபுரத்தைச் சோ்ந்த அழகா்சாமி மகன் கண்ணன் (38) என்பவா் தீ வைத்தது தெரிந்தது. இதுகுறித்து முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT