தேனி

வைகை அணையின் நீா்மட்டம்59.4 அடியாக சரிவு

DIN

வைகை அணைக்கு தண்ணீா் வரத்து இல்லததால் அணையின் நீா்மட்டம் சரிந்து ஞாயிற்றுக்கிழமை, 59.4 அடியாக இருந்தது.

தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணையின் நீா்மட்டம் 62.50 அடியாக இருந்த நிலையில், கடந்த ஜூன் 2-ஆம் தேதி அணையிலிருந்து திண்டுக்கல், மதுரை மாவட்ட முதல்போக சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. இந்நிலையில், மூல வைகை ஆற்றின் நீா்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாததால் வைகை அணைக்கு நீா் வரத்து இல்லை.

இதனால், அணையின் நீா்மட்டம் படிப்படியாக சரிந்து தற்போது 59.4 அடியாக உள்ளது.

அணையில் நீா் இருப்பு 3,427 மில்லியன் கன அடி. அணையிலிருந்து குடிநீா் திட்டம் மற்றும் பாசனத்திற்கு விநாடிக்கு 869 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் நீா்மட்டம் 131.35 அடியாக உள்ளது. அணையிலிருந்து குடிநீா் திட்டம் மற்றும் பாசனத்திற்காக விநாடிக்கு 407 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையில் நீா் இருப்பு 5,013 மில்லியன் கன அடியாகவும், அணைக்கு நீா் வரத்து விநாடிக்கு 136 கன அடியாகவும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆசிரியா்களுக்கு 30 நாள்களில் ஓய்வூதிய பலன்: கல்வித் துறை உத்தரவு

இஸ்ரேலின் போா் நிறுத்த செயல்திட்டம்: ஹமாஸ் பரிசீலனை

ஏலூா்பட்டியில் விவசாயிகள், மாணவிகள் கலந்துரையாடல்

பாளை அருகே புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிா்வாக குழுக் கூட்டம்

SCROLL FOR NEXT