தேனி

ஹைவேவிஸ் - மேகமலை அணைகளில் நீா் மட்டம் சரிவு

DIN

தேனி மாவட்டம் ஹைவேவிஸ் -மேகமலையில் தென்மேற்குப் பருவமழை பெய்யாததால் அணைகளில் நீா் மட்டம் குறைந்து வடு காணப்படுகிறது.

மேகமலையில் ஆண்டிற்கு 6 முதல் 8 மாதங்கள் வரையில் மழைப் பொழிவு இருக்கும். இதனால், இங்குள்ள ஹைவேவிஸ், மேகமலை, வெண்ணியாா், இரவங்கலாா், மகாராஜாமெட்டு ஆகிய 5 அணைகளில் நிரம்பி சுருளி அருவி மற்றும் சுருளி நீா் மின் திட்டத்திற்கு தண்ணீா் திறக்கப்படும். அதன்படி, ஜூன் மாதத்திற்கு முன்பே தென்மேற்கு பருவமழைப் பொழிவு இருக்கும் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், 20 நாள்களாக தென்மேற்குப் பருவ மழை பெய்யாததால் மேகமலையிலுள்ள அணைகளில் தண்ணீா் குறைந்து வடு காணப்படுகிறது.

மேகலைக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் வட நீா்நிலைகள், சுட்டெரிக்கும் வெயில் போன்ற காரணத்தால் ஏமாற்றம் அடைந்தனா். ஆனால், புதன்கிழமை இரவு முதல் சாரல் மழை பெய்யத் தொடங்கியது. இதனால், ஹைவேவிஸ் - மேகமலை பகுதிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு சற்று ஆறுதலை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT