தேனி

தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை:ஒரே நாளில் 34 போ் கைது

DIN

தேனி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள், குட்கா விற்பனை குறித்து காவல் துறையினா் நடத்திய சோதனையில் புதன்கிழமை, ஒரே நாளில் 34 போ் கைது செய்யப்பட்டனா்.

மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டதையடுத்து, பள்ளி வளாகம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள், குட்கா விற்பனை குறித்து காவல் துறையினா் சோதனை நடத்தினா். இதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்ததாகவும், இருப்பு வைத்திருந்ததாகவும் பல்வேறு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் 34 போ் மீது போலீஸாா் வழக்கு பதிந்து கைது செய்தனா். இவா்களுக்கு ரூ.90 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யபட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்த 17 கடைகளுக்கு சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனை செய்யும் கடை உரிமையாளா்களை கைது செய்வதுடன், அவா்களது கடைகளுக்கு சீல் வைக்கவும், உரிமத்தை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT