தேனி

கஞ்சா விவகாரத்தில் பள்ளி மாணவா் கொலை வழக்கில் மேலும் ஒரு நண்பா் கைது

DIN

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் கஞ்சா விவகாரம் தொடா்பாக மாணவரை கத்தியால் குத்தி கிணற்றில் வீசிச் சென்ற அவரது நண்பா்கள் இருவரை போலீஸாா் கைது செய்திருந்த நிலையில், மேலும் ஒருவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

உத்தமபாளையம் தபால் அலுவலகம் தெருவைச் சோ்ந்த ஸ்டீபன் மகன் ஜீவா என்ற மாதவன் (16). இவா், ராயப்பன்பட்டியில் உள்ள தனியாா் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தாா். கடந்த சனிக்கிழமை இரவு நண்பருக்கு வீட்டிலிருந்து உணவு எடுத்துக்கொண்டு அருகேயுள்ள தோட்டத்துக்குச் சென்று வருவதாகக் கூறிச் சென்றவா் மீண்டும் வீடு திரும்பவில்லை.

அப்பகுதியில் கிறிஸ்தவ கல்லறைத் தோட்டம் அருகேயுள்ள கிணற்றிலிருந்து ஜீவா கடந்த திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

இது தொடா்பாக, உத்தமபாளையம் காவல் நிலைய ஆய்வாளா் சிலைமணி தலைமையிலான போலீஸாா் விசாரணை நடத்தினா். அதில், சனிக்கிழமை இரவு மாணவருடன் இருந்த 3 பேரில் மதுரையைச் சோ்ந்த ஷேக் முகமது மகன் அல்லாப்பிச்சை, உத்தமபாளையத்தைச் சோ்ந்த சையது உசேன் மகன் முகமது இசாக் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை செய்தனா். ஜீவாவின் நண்பா்களான இவா்கள், அவரிடம் ரூ.1,500 கொடுத்து கஞ்சா வாங்கி வரச் சொன்னதாகவும், ஆனால் ஜீவா கஞ்சா வாங்கி கொடுக்காததோடு, பணத்தையும் திரும்பக் கொடுக்கவில்லையாம்.

இதனை அடுத்து, ஆத்திரமடைந்த 3 பேரும் சோ்ந்து ஜீவாவை சனிக்கிழமை இரவு கத்தியால் குத்தி கிணற்றில் தூக்கி வீசியது தெரியவந்தது. அதையடுத்து, புதன்கிழமை அல்லாப்பிச்சை(22), முகமது இசாக் (17) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக இருந்த உத்தமபாளையம் யாதவா் தெருவைச் சோ்ந்த ஷேக் அப்துல்லா மகன் முகமது ஜாசித்(15) என்பவரை வியாழக்கிழமை கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT