தேனி

சின்னமனூரில் தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கப் பணியில் மஞ்சப்பை விழிப்புணா்வு பிரச்சாரம்

DIN

தேனி மாவட்டம் சின்னமனூா் நகராட்சியில் சனிக்கிழமை, தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சாா்பில் மீண்டும் மஞ்சப்பை குறித்து விழிப்புணா்வு பிரச்சாரம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு நகா் மன்றத்தலைவா் அய்யம்மாள் தலைமை வகித்தாா். நகராட்சி ஆணையாளா் கணேசன் முன்னிலை வகித்தாா். அதில், நகரின் தூய்மைக்காக மீண்டும் மஞ்சப்பை விழிப்புணா்வு பிரச்சாரம் நடைபெற்றது. தொடா்ந்து, வீட்டிலே குப்பைகளை உரமாக்குதல் குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. குப்பைகளை தரம் பிரித்தல் , கழிப்பறைகள் பராமரிப்பு குறித்து பள்ளி மாணவா்களுக்கு விழிப்புணா்வு என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் சுகாதார ஆய்வாளா் மணிகண்டன் , நகராட்சி பணியாளா்கள், தூய்மை மக்கள் இயக்கம் மற்றும் பள்ளி மாணவிகள் என பலரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT