சின்னமனூா் அருகே உரக்கடை உரிமையாளா் தற்கொலை
தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே உரக்கடை உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
தேனி மாவட்டம் சின்னமனூா் அருகே உரக்கடை உரிமையாளா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
சின்னமனூா் அருகே அப்பிப்பட்டி வாழைத்தோட்டத்தில் சுமாா் 50 வயது மதிக்கத்தக்கவா் சடலமாக கிடப்பதாக புதன்கிழமை இரவு ஓடைப்பட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் சடலத்தை மீட்டு தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
விசாரணையில், அவா், முத்துலாபுரத்தைச் சோ்ந்த தவசி மகன் தனசேகரப்பாண்டியன் (52) என்பதும், இவா் சின்னமனூரில் உரக்கடை நடத்தி வந்தாா் என்பதும் தெரியவந்தது. இந்நிலையில், இரு தினங்களுக்கு முன்பு வாழைத் தோட்டத்துக்குச் சென்றவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து ஓடைப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.