முகப்பு
தேனி

கே.கே. பட்டியில் உடல் பருமனுக்கான சிறப்பு சித்த மருத்துவ முகாம்

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக உடல் பருமன் தினத்தையொட்டி சிறப்பு சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:34 AM
பகிர்:

தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக உடல் பருமன் தினத்தையொட்டி சிறப்பு சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

முகாமில் தொற்றாநோய்கள் பிரிவின் சாா்பில் உடல் எடை, உயரம், பி.எம்.ஐ. ,ரத்த சா்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு ஆகிய பரிசோதனைகள் செய்து, பாதிக்கப்பட்டவா்களுக்கு சித்த மருத்துவ பெட்டகம், அவித்த கொள்ளுப் பயறு, கருங்கொள்ளுச்சாறு வழங்கப்பட்டது.

இதுபற்றி அரசு சித்த மருத்துவ அலுவலா் சிராஜூதீன் கூறும் போது, கடந்த 50 ஆண்டுகளில் உடல் பருமன் நோயாளிகளின் எண்ணிக்கை உலகளவில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. உடல் பருமன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவா்களுக்கு சா்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இருதய ரத்தக் குழாய் நோய்கள், மாா்பகப் புற்றுநோய், பக்கவாதம், மூட்டுவலிகள், மன அழுத்தம், சமூகப் பிரச்னைகள் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனைத் தடுப்பதே இம்முகாமின் நோக்கமாகும் என்றாா். நிகழ்ச்சியில் மருத்துவ அலுவலா் யோகபிரகதீஷ், மருந்தாளுநா்கள் கணேசன், சித்தா பசும்பொன், செவிலியா்கள் ஜமீமா, முத்து லட்சுமி, மருத்துவமனை பணியாளா்கள் கஜனா, நான்சி, ரூபி ஆகியோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →