பெரியகுளம்: அறம் வளர்த்த நாயகி உடனுறை இராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
பெரியகுளம்: அறம் வளர்த்த நாயகி உடனுறை இராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர கொடியேற்றம்
பெரியகுளம் அறம் வளர்த்த நாயகி உடனுறை இராஜேந்திர சோழீஸ்வர் கோயில் பங்குனி உத்திரத் தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது.
இராஜேந்திர சோழீஸ்வரர் திருக்கோயிலில் மார்ச் 17-ம் தேதி பங்குனி உத்திரத் தேரோட்டம் நடைபெறுகிறது. தேரோட்டத்தினை முன்னிட்டு இன்று இராஜேந்திர சோழீஸ்வரர் மற்றும் பாலசுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் கோயில் எதிரேயுள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோயில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் சசி, சிதம்பர சூரியவேலு மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
Advertisement
Advertisement
மார்ச் 10-ம் தேதி வியாழக்கிழமை முதல் மார்ச் 18-ம் தேதி வெள்ளிக்கிழமை வரை பஞ்சமூர்த்திகள் வீதி உலா மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது. மார்ச் 17-ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணியளவில் சுவாமி தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.