முகப்பு
தேனி

கம்பம் பஞ்சு கிடங்கில் தீ விபத்து: ரூ.3 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் சேதம்

தேனி மாவட்டம் கம்பத்தில் மின்கசிவு காரணமாக பஞ்சு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. ரூ.3 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:42 AM
பகிர்:

கப்பம்: தேனி மாவட்டம் கம்பத்தில் மின்கசிவு காரணமாக பஞ்சு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. ரூ.3 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் எரிந்து நாசமாகின.

தேனி மாவட்டம் கம்பம், கம்பம்மெட்டு காலனி அருகே கூடலூரைச் சேர்ந்த காதர்ஒலி(62) என்பவர் சொந்தமான இலவம் பஞ்சு கிடங்கு உள்ளது.

இந்த கிடங்கில் இன்று மதிய வேளையில் கரும்புகை வெளியேறியது. இதை அக்கம் பக்கத்தினர் கம்பம் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

நிலைய அலுவலர் அழகர்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு வாகனத்தில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர்.

மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இந்த தீ விபத்தால் சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான பஞ்சுகள் வீணாகின.

முழு கட்டுரையைப் படிக்க →