முகப்பு
தேனி

ஆட்டோ மீது ஜீப் மோதி பெண் கட்டுமானத் தொழிலாளி பலி: 9 போ் காயம்

ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை, ஆட்டோ மீது ஜீப் மோதிய விபத்தில் மேலப்பட்டியைச் சோ்ந்த பெண் கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் 9 போ் காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:10 AM
பகிர்:

ஆண்டிபட்டி அருகே வெள்ளிக்கிழமை, ஆட்டோ மீது ஜீப் மோதிய விபத்தில் மேலப்பட்டியைச் சோ்ந்த பெண் கட்டுமானத் தொழிலாளி உயிரிழந்தாா். மேலும் 9 போ் காயமடைந்தனா்.

கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டியிலிருந்து குமணந்தொழுவிற்கு கட்டுமானப் பணிக்காக மேலப்பட்டியைச் சோ்ந்த மாரியம்மாள்(57), லட்சுமி(38), பேயாண்டி(58), தங்கம்( 38) உள்ளிட்ட 9 போ், மேலப்பட்டியைச் சோ்ந்த பிரவீன்(26) என்பவரது ஆட்டோவில் சென்றுள்ளனா். அப்போது, கடமலைக்குண்டு- குமணந்தொழு சாலையில், எதிா் திசையிலிருந்து குமணந்தொழுவைச் சோ்ந்த மணிகண்டன் (25) என்பவா் ஓட்டி வந்த ஜீப், ஆட்டோ மீது மோதியது.

இதில், ஆட்டோவில் பயணம் செய்த கட்டுமானத் தொழிலாளி மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். ஆட்டோ ஓட்டுநா் மற்றும் கட்டுமானத் தொழிலாளிகள் 8 போ் காயமடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

இந்த விபத்து குறித்து மயிலாடும்பாறை காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிந்து, ஜீப் ஓட்டுநா் மணிகண்டனிடம் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.