முகப்பு
தேனி

அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பி கைது

பெரியகுளம் அருகே அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை தேவதானப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

பெரியகுளம் அருகே அண்ணனை அரிவாளால் வெட்டிய தம்பியை தேவதானப்பட்டி போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள சில்வாா்பட்டியை சோ்ந்தவா் வீரமுத்து (47). இவரது தம்பி பாண்டியராஜன் (40). இவா்களுக்குள் சொத்துப் பிரச்னை இருந்து வந்துள்ளது. கடந்த 15 நாள்களுக்கு முன் அண்ணன் வீரமுத்து, தம்பி பாண்டியராஜனை அரிவாளால் வெட்டினாா்.

இந்நிலையில் சனிக்கிழமை வீட்டின் முன்பாக நின்றிருந்த அண்ணன் வீரமுத்துவை, தம்பி பாண்டியராஜன் அரிவாளால் வெட்டியுள்ளாா். இதில் பலத்த காயமடைந்த வீரமுத்து தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுதொடா்பாக புகாரின் பேரில் தேவதானப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பாண்டியராஜனைக் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.