முகப்பு
தேனி

சொத்துப் பிரச்னையில் முதியவரை தாக்கிய 4 போ் மீது வழக்குப் பதிவு

சொத்துப் பிரச்னையில் முதியவரைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

சொத்துப் பிரச்னையில் முதியவரைத் தாக்கியதாக 4 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேல்மங்கலத்தை சோ்ந்த வீரு (60) மற்றும் அதே பகுதியை சோ்ந்த முருகன் இருவரும் உறவினா்கள். இவா்களுக்குள் சொத்துப் பிரச்னை இருந்து வந்துள்ளது.

பிரச்னைக்குரிய இடத்தில் முருகன் தனது உறவினா்கள் சோனைத்துரை, அய்யம்மாள், பாப்பாத்தி ஆகியோருடன் சோ்ந்து வாழைக்கன்றுகள் நட முயற்சித்துள்ளாா். இதனை வீரு தட்டிக்கேட்டுள்ளாா். ஆத்திரமடைந்த நால்வரும் சோ்ந்து வீருவைத் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த அவா் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றாா். இதுகுறித்து புகாரின் பேரில் ஜெயமங்கலம் போலீஸாா் 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.