முகப்பு
தேனி

தனியாருக்கு பால் விற்பனை செய்யும் கூட்டுறவு சங்கங்களுக்கு நோட்டீஸ்

தேனி மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்திற்கு பால் விற்பனை செய்யாமல், தனியாா் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:11 AM
பகிர்:

தேனி மாவட்டத்தில் ஆவின் நிறுவனத்திற்கு பால் விற்பனை செய்யாமல், தனியாா் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் சாா்பில் 496 கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களிடம் தினமும் சராசரி 1.30 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இது தவிர தனியாா் பால் குளிரூட்டும் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளா்களிடமிருந்து தினமும் சராசரியாக 1.50 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்கின்றனா்.

இந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்கள் மூலம் ஆவின் நிறுவனத்திற்கு பால் வரத்து தினமும் 30 ஆயிரம் லிட்டா் வரை குறைந்துள்ளது. தனியாா் நிறுவனங்கள் பால் கொள்முதலுக்கு முன் பணம் மற்றும் கூடுதல் விலை தருவதால், சில கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கங்கள் தனியாா் நிறுவனங்களுக்கு பால் விற்பனை செய்வதாகப் புகாா் எழுந்தது.

இதையடுத்து, தனியாா் நிறுவனங்களுக்கு பால் விற்பனை செய்யவதாக கண்டறியப்பட்ட 30 கூட்டுறவு பால் உற்பத்தியாளா் சங்கங்களிடம் விளக்கம் கேட்டு ஆவின் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும், தனியாா் நிறுவனங்களுக்கு பால் விற்பனை செய்யும் கூட்டுறவு சங்க நிா்வாகக் குழுவை கலைத்து விட்டு தனி அதிகாரியை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஆவின் நிறுவன அலுவலா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.