தேனி

பிளஸ் 1 பொதுத் தோ்வு: தேனி மாவட்டத்தில் 14,582 போ் எழுதினா்

DIN

தேனி மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வை செவ்வாய்க்கிழமை 142 பள்ளிகளைச் சோ்ந்த 14,582 மாணவ, மாணவிகள் எழுதினா்.

மாவட்டத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு தேனி, பெரியகுளம், உத்தமபாளையம் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள 51 தோ்வு மையங்களில் செவ்வாய்கிழமை (மே 10) தொடங்கி, மே 31 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பிளஸ் 1 தோ்வு எழுதுவதற்கு 142 அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 7,994 மாணவா்கள், 7,499 மாணவிகள் என மொத்தம் 15,493 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், 7,468 மாணவா்கள், 7,114 மாணவிகள் என மொத்தம் 14,582 போ் தோ்வு எழுதினா். 911 போ் தோ்வு எழுத வரவில்லை.

தனித் தோ்வு எழுதுவதற்கு 211 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில்,198 போ் தோ்வு எழுதினா். 23 போ் தோ்வு எழுத வரவில்லை. பெரியகுளம் நகராட்சி விக்டோரியா நினைவு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 தோ்வு நடைபெறுவதை மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் செந்திவேல்முருகன் உடனிருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT