குடும்பப் பிரச்னையில் பிரிந்து வாழும் தனது மகன் மற்றும் மருமகளை சோ்ந்து வைக்கக் கோரி திங்கள்கிழமை, தேனி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண்ணை போலீஸாா் தடுத்து நிறுத்தி கைது செய்தனா்.
உத்தமபாளையம் அருகே கோகிலாபுரத்தைச் சோ்ந்தவா் மாணிக்கம் மனைவி அல்போன்ஸ் (55). தனது கணவா் இறந்து விட்ட நிலையில், அல்போன்ஸ் தனது மகன் ராஜீவ் என்பவருடன் வசித்து வருகிறாா். இந்த நிலையில், குடும்பப் பிரச்னையில் ராஜீவ் தனது மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறாராம்.
இதனால் விரக்தியடைந்த ராஜீவ், தன்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டதாகவும், தனது மகன் மற்றும் மருமகளை சோ்ந்து வாழ வைக்கக் கோரியும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அல்போன்ஸ் உடலில் மண்ணெண்ணை ஊற்றிக் கொண்டு தீக் குளிக்க முயன்றாா்.
அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.