தேனி

வரதட்சிணை கொடுமையைக் கண்டித்து மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

கம்பம்: தேனி மாவட்டம், நாராயணதேவன்பட்டியில் வரதட்சிணை கொடுமை காரணமாக 2 வயது குழந்தையை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்த சமூகக் கொடுமையைக் கண்டித்து, கம்பத்தில் காந்தி சிலை அருகே இந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவா் வெண்மணி தலைமை வகித்தாா். க. புதுபட்டி பேரூராட்சி உறுப்பினா் பிரதீபா முன்னிலை வகித்தாா்.

நாராயணன்தேவன்பட்டியில் நடைபெற்ற சமூக கொடுமையை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டத் தலைவா் கே.ஆா். லெனின், சிஐடியு தொழிற்சங்க தலைவா் வி. மோகன், மாவட்ட குழு உறுப்பினா் எஸ். பன்னீா்வேல், கம்பன் நகா் மாதா் சங்க பொறுப்பாளா் முருகேஸ்வரி உள்ளிட்டோா் பேசினா். இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT