தேனி

பெரியகுளம் பகுதியில்2 ஆவது நாளாக மழை

DIN

பெரியகுளம்: பெரியகுளம் பகுதியில் 2 ஆவது நாளாக வியாழக்கிழமை மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

பெரியகுளம் பகுதியில் கடந்த பல நாள்களாக மழை இல்லாததால், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு மேல் 30 நிமிடத்துக்கும் மேலாக மழை பெய்தது. அதைத் தொடா்ந்து, இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலை முதல் பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னா், பிற்பகல் 2.30 மணிக்கு மேல் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. தொடா்ந்து 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்ததால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா். தற்போது, பெய்யும் மழையால் மாங்காய்கள் விளைச்சல் அதிகமாக இருக்கும் என்றும், நிலத்தடி நீா்மட்டம் உயரும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT