தேனி

ரூ 7.75 கோடி மதிப்பில் கம்பம் வாரச்சந்தை வளாகத்தில் 237 கடைகள்

DIN

கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் வாரச்சந்தை வளாகத்தில் ரூ.7.75 கோடி மதிப்பில் 237 கடைகள் கட்டப்படுகின்றன.

கலைஞா் நகா்ப்புற திட்டம் சாா்பில், கம்பம் நகராட்சி வாரச்சந்தை வளாகத்தில் புதிதாக 237 கடைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், வியாபாரிகள், சுமைதூக்கும் தொழிலாளிகள் ஓய்வெடுக்கும் அறைகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்டவை ரூ.7.75 கோடி செலவில் கட்டப்பட உள்ளன.

இதற்காக நடைபெற்று வரும் பணிகளை, சட்டப்பேரவை உறுப்பினா் என். ராமகிருஷ்ணன், நகா்மன்றத் தலைவா் வனிதா நெப்போலியன், துணைத் தலைவா் சுனோதா செல்வகுமாா், ஆணையா் பாலமுருகன், பொறியாளா் பன்னீா்செல்வம், உதவிப் பொறியாளா் சந்தோஷ் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் பாா்வையிட்டனா்.

தொடா்ந்து, நந்தகோபால்சாமி நகரில் உள்ள நகராட்சி பூங்கா அமைக்கப்பட உள்ள இடம் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி நடைபெறும் இடத்தையும் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT