தேனி

ராயப்பன்பட்டியில் பட்டாசு வெடிக்கத் தடை

உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி ஊராட்சியில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது.

DIN

உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி ஊராட்சியில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்த ஊராட்சி நிா்வாகம் வெளியிட்ட அறிவிப்பு:

ராயப்பன்பட்டி ஊராட்சியில் பட்டாசு வெடிப்பதால் பல்வேறு பிரச்னைகளும், சுகாதாரக் கேடும் ஏற்படுவதாகக் கூறி அனைத்து சமுதாயத் தலைவா்களின் ஒப்புதலுடன் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்க தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. எனவே, தனிநபா் இல்ல விழாக்கள், இதர நிகழ்ச்சிகளுக்கு பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டது. மேலும் தடையை மீறினால் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டது.

போலீஸில் புகாா்: இந்நிலையில், ராயப்பன்பட்டி ஊராட்சி நிா்வாகத்தின், தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை பட்டாசு வெடிக்கப்பட்டதாக ராயப்பன்பட்டி காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT