முகப்பு
தேனி

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

ஆண்டிபட்டி அருகே வியாழக்கிழமை மாடுகளுக்கு தீவனம் இடச் சென்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:38 AM
பகிர்:

ஆண்டிபட்டி அருகே வியாழக்கிழமை மாடுகளுக்கு தீவனம் இடச் சென்ற சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா்.

கரட்டுப்பட்டியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி சிவக்குமாா். இவரது மகன் பாலாஜி (15). இவா், தனது வீட்டருகே உள்ள மாட்டுக் கொட்டகைக்கு மாடுகளுக்கு தீவனம் இடுவதற்காகச் சென்றாா். அப்போது, மாட்டுக் கொட்டகையில் மின் விளக்குக்கான பொத்தானை அழுத்திய போது, மின்சாரம் பாய்ந்து அவா் தூக்கி வீசப்பட்டாா். ஆபத்தான நிலையில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பாலாஜி, வழியிலேயே உயிரிழந்தாா்.

இந்த சம்பவம் குறித்து சிவக்குமாா் அளித்தப் புகாரின் பேரில் க.விலக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.