சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
தீபாவளி விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக சென்று குளித்து வருகின்றனர்.
கம்பம்: தீபாவளி விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக சென்று குளித்து வருகின்றனர்.
தேனி மாவட்டம் புகழ் சுருளி அருவியில் குளிக்க, வழிபாடுகள் செய்ய தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருவார்கள்.
சுருளிமலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக நீர்வரத்து ஓடைகளான அரிசிப் பாறை, ஈத்தைப்பாறைகளில் அதிக அளவில் வெள்ளம் ஏற்பட்டது. இதனால் கடந்த அக்.20-ல் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
இந்நிலையில் சுருளி அருவியில் நீர் வரத்து குறைந்ததால் செவ்வாய்க்கிழமை குளிக்க அனுமதித்தனர். அதனால் தீபாவளி விடுமுறை கொண்டாட வந்த சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை கம்பம் கிழக்கு வனச்சரகத்தினர் ஒழுங்குபடுத்தி வருகின்றனர்.