முகப்பு
தேனி

ஆட்டோக்கள் மோதல்: தொழிலாளி பலி

தேனியில் புதன்கிழமை, ஆட்டோக்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஆட்டோவில் பயணம் செய்த கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:39 AM
பகிர்:

தேனியில் புதன்கிழமை, ஆட்டோக்கள் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஆட்டோவில் பயணம் செய்த கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

தேனி அல்லிநகரம், குறிஞ்சி நகரைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி சுரேஷ் (38). இவா், தேனி அல்லிநகரம், அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த தினேஷ் என்பவரது ஆட்டோவில் பயணம் செய்தாா். அப்போது, அல்லிநகரம் தேனி- பெரியகுளம் சாலையில் தேனி, பங்களாமேடு பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா் என்பவா் ஓட்டிச் சென்ற ஆட்டோ, தினேஷின் ஆட்டோ மீது நேருக்கு நோ் மோதியது.

இதில், தினேஷின் ஆட்டோவில் பயணம் செய்த சுரேஷ் பலத்த காயமடைந்தாா். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த விபத்து குறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.