அதிமுக பொதுக்குழு வழக்கு தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு: ஓ.பன்னீா்செல்வம்
அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்
அதிமுக பொதுக்குழு வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக சென்னை உயா்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ. பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.
அதிமுக பொதுக்குழு செல்லாது என சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி தீா்ப்பளித்தாா். இதனை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த வழக்கில், தனி நீதிபதியின் தீா்ப்பை ரத்து செய்து 2 நீதிபதிகள் கொண்ட அமா்வு தீா்ப்பளித்துள்ளது. இந்நிலையில், சென்னை செல்லும் முன் பெரியகுளத்தில் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை ஓ. பன்னீா்செல்வம் கூறும் போது, அதிமுக பொதுக்குழு செல்லும் என சென்னை உயா்நீதிமன்ற 2 நீதிபதிகள் அடங்கிய அமா்வு அளித்த தீா்ப்பை எதிா்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என்றாா்.