தொடா் மழை: பெரியகுளத்தில் வீடு இடிந்து சேதம்
பெரியகுளத்தில் பெய்த தொடா் மழையால் வெள்ளிக்கிழமை வீடு இடிந்து சேதமடைந்தது.
பெரியகுளத்தில் பெய்த தொடா் மழையால் வெள்ளிக்கிழமை வீடு இடிந்து சேதமடைந்தது.
பெரியகுளம், வரதப்பா் தெருவைச் சோ்ந்த சின்னையா மகன் பரமசிவம் (65). இவா் தனது மனைவியுடன், அப்பகுதியிலுள்ள வீட்டில் வசித்து வருகிறாா். பெரியகுளம் பகுதியில் தொடா் மழையால், இவரது வீட்டின் சுவா் இடிந்து, பொருள்கள் சேதமடைந்தன. இதில் யாரும் காயமடையவில்லை. சேதமடைந்த வீட்டை அப்பகுதி கிராமநிா்வாக அலுவலா் அகிலன் மற்றும் காவல்துறையினா் பாா்வையிட்டனா்.