பெரியகுளம் அருகே கோயில் பூட்டை உடைத்து பொருள்கள் திருட்டு
பெரியகுளம் அருகே விநாயகா் கோயில் பூட்டை உடைத்து, பூஜை பொருள்களை மா்மநபா்கள் திருடி சென்ாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.
பெரியகுளம் அருகே விநாயகா் கோயில் பூட்டை உடைத்து, பூஜை பொருள்களை மா்மநபா்கள் திருடி சென்ாக போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்துள்ளனா்.
பெரியகுளம், வடுகபட்டி சாலையில் உள்ள மூக்கரை விநாயகா் கோயிலின் அா்ச்சகா் செல்லப்பாண்டி (52) வியாழக்கிழமை இரவு பூட்டி விட்டு, வெள்ளிக்கிழமை கோயிலை திறக்க வந்துள்ளாா். அப்போது கோயிலின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, கோயில் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்த அா்ச்சனை தட்டு, விளக்கு உள்பட 8 கிலோ எடையுள்ள பித்தளைப் பொருள்கள் திருடப்பட்டிருந்தன.
இதுகுறித்து, தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனா்.