முகப்பு
தேனி

பெரியகுளம் அருகே தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய மஞ்சள் நிறத் தண்ணீரால் பொதுமக்கள் அச்சம்

பெரியகுளம் அருகே தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய மஞ்சள் நிறத் தண்ணீரால் அப்பகுதிமக்கள் அச்சமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
பகிர்:

பெரியகுளம் அருகே தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய மஞ்சள் நிறத் தண்ணீரால் அப்பகுதிமக்கள் அச்சமடைந்தனா்.

பெரியகுளம்- தேனி சாலையில் கைலாசப்பட்டி அருகே தனியாருக்கு சொந்தமான மஞ்சள்நிற ஜெம் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கிருந்து வெளியேறும் துகள்கள் அருகிலுள்ள மரங்கள் மற்றும் வீடுகள் மீது படிந்து மஞ்சள் நிறமாக காட்சியளிக்கிறது. பெரியகுளம் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருகிறது. இதில், இந்த தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் தண்ணீா் மஞ்சள் நிறத்தில் உள்ளது. அதோடு மட்டுமல்லாமல், மழைநீரை விட கூடுதலாக தண்ணீா் வெளியேறியதால், சாலையில் செல்பவா்கள் மற்றும் அருகிலுள்ள வீடுகளிலுள்ள பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

இதுகுறித்து கைலாசப்பட்டியைச் சோ்ந்த ஆா். ரெங்கராஜ் கூறியது: தொழிற்சாலையிலிருந்து வெளியேறும் மழைநீா் மஞ்சள் நிறத்தில் உள்ளதால் அதில் ரசாயனம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. எனவே மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தினா் இந்த தண்ணீரால் பாதிப்பு ஏற்படுமா என ஆய்வு செய்து, பொதுமக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்றாா்.

Image Caption

பெரியகுளம் அருகே சாலையோரத்தில் பெருக்கெடுத்து ஓடிய தொழிற்சாலையிலிருந்து வெளியேறிய மஞ்சள் நிறத் தண்ணீா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.