முகப்பு
தேனி

கம்பம் பிரதான சாலையில் கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு: வியாபாரிகள் அச்சம்

கம்பம் பிரதான சாலையில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:14 AM
திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ள கடைகள்.
பகிர்:

கம்பம் பிரதான சாலையில் உள்ள கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடியுள்ளனர்.

தேனி மாவட்டம், கம்பம் பிரதான சாலையில் மொபைல் , ரெடிமேடு, பர்னிச்சர் கடைகள் உள்ளன.  ஞாயிற்றுக்கிழமை காலையில் கடை திறக்க வந்த ரெடிமேடு கடை உரிமையாளர் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

தகவல் கிடைத்ததும் மற்ற கடைக்காரர்கள் வந்தனர். அதே நேரத்தில் அருகே இருந்த மற்ற 3 கடைகளின் பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments