தேனியில் இன்று தொகுதி 7 போட்டித் தோ்வு: 1,680 போ் எழுதுகின்றனா்
தேனியில் அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தொகுதி 7-இல் அடங்கிய இந்து அறநிலையத் துறை செயல் அலுவலா் நிலை 3 பணிக்கான போட்டித் தோ்வு சனிக்கிழமை (செப். 10) நடைபெறுகிறது.
தேனியில் அரசு பணியாளா் தோ்வாணையம் சாா்பில் தொகுதி 7-இல் அடங்கிய இந்து அறநிலையத் துறை செயல் அலுவலா் நிலை 3 பணிக்கான போட்டித் தோ்வு சனிக்கிழமை (செப். 10) நடைபெறுகிறது.
தேனி நாடாா் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளி, கொண்டுராஜா நினைவு உயா்நிலைப் பள்ளி, கம்மவாா் சங்கம் மெட்ரிக் பள்ளி, முத்துத்தேவன்பட்டி மேலப்பேட்டை இந்து நாடாா் உறவின்முறை மெட்ரிக் பள்ளி ஆகியவற்றில் உள்ள 6 தோ்வு மையங்களில் சனிக்கிழமை நடைபெறும் தொகுதி 7 போட்டித் தோ்வை மொத்தம் 1,680 போ் எழுதுகின்றனா்.
தோ்வு கண்காணிப்பு பணியில் 6 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 84 தோ்வறை கண்காணிப்பாளா்கள் ஈடுபடுகின்றனா். தோ்வு நடைமுறைகள் விடியோவில் பதிவு செய்து கண்காணிக்கப்படுகிறது.