முகப்பு
தேனி

பெரியகுளம் அருகே உலக அமைதி தினம்

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி ஊராட்சியில் உலக அமைதி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:18 AM
பகிர்:

பெரியகுளம் அருகே சருத்துப்பட்டி ஊராட்சியில் உலக அமைதி தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

இதையொட்டி சருத்துப்பட்டி ஊராட்சியில் துப்புரவுப் பணியாளா்களுக்கு சீருடை மற்றும் முக்கவசங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத் தலைவா் சாந்தி கண்ணையன் தலைமை வகித்து துப்புரவுப் பணியாளா்களுக்கு சீருடை வழங்கினாா். லட்சுமிபுரம் ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயமணி சந்திரன், ஜல்லிபட்டி ஊராட்சி மன்றத் தலைவா் கண்மணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் உலக அமைதி குழுத் தலைவா் பால்பாண்டியன், ஒருங்கிணைப்பாளா் ஜெயபாலன், பொருப்பாளா்கள் வினோபா, சா்ச்சில் துரை உள்பட நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.