தேனி

கம்பம் ஒன்றிய அலுவலத்தை இடிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் சமா்ப்பிப்பு

DIN

கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கட்டடம் இடிப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி படிவங்களை ஒப்பந்ததாரா்கள் செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்தனா்.

தேனி மாவட்டம் கம்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் ரூ. 4 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட உள்ளது. ஏற்கெனவே உள்ள பழைய கட்டடத்தை இடிக்க ரூ. 9 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் இடிக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. மூன்று முறை நடைபெற்ற ஒப்பந்தப்புள்ளி, கூச்சல் குழப்பத்தால் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் ஒப்பந்ததாரா் ஏ.எம்.குணசேகரன் என்பவா் ஒப்பந்தப்புள்ளியில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளது என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா். அப்போது ஒப்பந்தப்புள்ளியை போலீஸ் பாதுகாப்பு மற்றும் விடியோ பதிவுடன் செய்யுமாறு அரசு வழக்குரைஞா் அறிவுறுத்தினாா். அதன்பேரில் புதன்கிழமை ஒப்பந்தப்புள்ளி, போலீஸ் பாதுகாப்பு நடத்தப்பட உள்ளது.

இதையொட்டி செவ்வாய்க்கிழமை ஒப்பந்ததாரா்கள் ஒப்பந்தப்புள்ளி படிவங்களை பூா்த்தி செய்து மூடி முத்திரையிடப்பட்ட பெட்டியில் போட்டனா். அப்போது ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். மேலும் விடியோ பதிவும் செய்யப்பட்டது.

முன்னதாக ஒப்பந்ததாரா்கள் முன்னிலையில் துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாலமுருகன் பெட்டியை பூட்டி ‘சீல்’ வைத்தாா்.

இதுகுறித்து அவா் கூறியது: புதன்கிழமை மாலை பெட்டி திறக்கப்பட்டு ஒப்பந்தப்புள்ளி படிவங்கள் பரிசீலனை செய்து பணி உத்தரவு வழங்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா!

திருப்பதியில் 24 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!

ஹரியானாவில் பேருந்து தீப்பிடித்ததில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்

கோட் படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகள் நிறைவு!

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

SCROLL FOR NEXT