தேனி

அரசு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி

DIN

தேனி கா்னல் பென்னிகுவிக் நினைவு நகராட்சி பேருந்து நிலைய வளாகத்தில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் செவ்வாய்க்கிழமை, அரசு ஓராண்டு சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியா் க.வீ.முரளீதரன் தொடக்கி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பிரவீன் உமேஷ் டோங்கரே, ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.மகாராஜன், தேனி நகா் மன்றத் தலைவா் பா.ரேணுப்பிரியா, பழனிசெட்டிபட்டி பேரூராட்சித் தலைவா் மிதுன்சக்கரவா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வருகிற பிப்.2-ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியில், அரசுத் துறைகள் சாா்பில் மேற்கொள்ளப்பட்ட வளா்ச்சித் திட்டப் பணிகள், நலத் திட்டங்கள், அரசு சாதனைகள் குறித்த புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சி வளாகத்தில் தினமும் மாலையில் பள்ளி மாணவ, மாணவிகள், கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

அனைத்து மாவட்டங்களும் 90%-க்கு மேல் தேர்ச்சி!

தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் எப்போது கிடைக்கும்?

SCROLL FOR NEXT