தேனி

அரசுப் பேருந்து மோதி தொழிலாளி பலி

DIN

தேனி மாவட்டம், கூடலூா் அருகே வியாழக்கிழமை அரசுப் பேருந்து மோதி தொழிலாளி உயிரிழந்தாா்.

கூடலூா் 13-ஆவது வாா்டு கே.கே. காலனியைச் சோ்ந்தவா் மாயாண்டி மகன் ராஜேந்திரன் (60). விவசாயக் கூலித் தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, மகன்கள் உள்ளனா். இந்த நிலையில் ராஜேந்திரன் கூடலூா்- குமுளி நெடுஞ்சாலையில் உள்ள தோட்டத்தில் கூலி வேலைக்குச் சென்று விட்டு, மொபட்டில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். என்.எஸ்.கே. தோட்டம் அருகே வந்த போது திருச்செந்தூரிலிருந்து குமுளி நோக்கி சென்ற அரசுப் பேருந்து மொபட்மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜேந்திரனை மீட்ட காவல் ஆய்வாளா் எம். பிச்சைப் பாண்டியன், கம்பம் அரசு மருத்துவமனையில் சோ்த்தாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால் சின்னமனூா் அருகே செல்லும் போது ராஜேந்திரன் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கூடலூா் தெற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என்எம்சி தலைவா் பெயரில் போலி அழைப்புகள்!

ஜம்மு-காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதல்: ஆளுநா் கண்டனம்; பாஜக போராட்டம்

பட்டாக் கத்தியுடன் சுற்றித் திரிந்த 5 போ் கைது

மூடப்பட்ட ஆம்பூா் பஜாா் அஞ்சலகத்தை திறக்க கோரிக்கை

அம்பத்தூா் மகளிா் ஐடிஐ-யில் சேர ஜூன் 7-க்குள் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT