தேனி

மதுரை-போடி இடையே 110 கி.மீ. வேகத்தில் ரயில் என்ஜின் சோதனை

மதுரை - போடி இடையே புதன்கிழமை இறுதி கட்டமாக ரயில்பாதை அதிர்வு சோதனை 110 கி.மீ. வேகத்தில் நடைபெற்றது.

DIN

போடி: மதுரை - போடி இடையே புதன்கிழமை இறுதி கட்டமாக ரயில்பாதை அதிர்வு சோதனை 110 கி.மீ. வேகத்தில் நடைபெற்றது.

போடி - மதுரை அகல ரயில் பாதை பணிகள் முடிந்த நிலையில் ஜூன் 15-ஆம் தேதி (வியாழக்கிழமை) நாளை போடி-மதுரை, போடி -சென்னை இடையே ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மதுரை-போடி இடையே அகல ரயில்பாதையில் அதிர்வுகள் குறித்த இறுதிக்கட்ட ஆய்வு ரயில் புதன் கிழமை நடைபெற்றது.
     OMS (Oscillation Monitoring System)  எனப்படும்  சிறப்பு ரயில் என்ஜின் மூலம் மதுரையிலிருந்து போடி வரை சோதனை செய்யப்பட்டது. இரண்டு பெட்டிகள் இணைக்கப்பட்ட இந்த ரயிலில் நவீன கருவிகள் மூலம் ரயில்பாதையின் அதிர்வு தாங்கும் திறன் சோதனை செய்யப்பட்டது. காலை 10 மணிக்கு புறப்பட்ட ரயில் போடிக்கு 11.15 மணிக்கு வந்து சேர்ந்தது. பின்னர் 11.45 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டு சென்றது.
      ரயிலில் பொறியாளர் குழுவினர் ரயில்பாதை குறித்து இறுதிக் கட்ட சோதனை மேற்கொண்டனர். நாளை (வியாழக்கிழமை) போடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் போடி-மதுரை, போடி-சென்னை ரயில்களை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மற்றும் மீன்வளம், கால்நடைத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேரில் பங்கேற்று ரயில் சேவைகளை தொடங்கி வைக்க உள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

தவறுதலாக 43 ஆண்டுகள் சிறை! இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரை நாடு கடத்தத் தடை

அடியே, அலையே! பராசக்தி முதல் பாடல் புரோமோ!

ஹிந்துஜா குழுமத் தலைவர் கோபிசந்த் காலமானார்

SCROLL FOR NEXT