தேனி

கம்பம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட தூய்மை பணியாளர்கள்

DIN

கம்பம்: தேனி மாவட்டம்கம்பம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை முற்றுகை போராட்டம் நடத்தினர்.

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் நிரந்தர மற்றும் தனியார்மயம் என  இரண்டு வகையான தூய்மை பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

வெள்ளிக்கிழமை நிரந்தர பணியாளர்கள் வேலைக்கு சென்ற நிலையில் தனியார்மயத்தில் பணியாற்றும் சுமார் 30-க்கும் மேலான ஆண், பெண் தூய்மை பணியாளர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் அமர்ந்து கூட்டம் போட்டனர். அரசு அலுவலக வளாகத்தில் கூட்டம் போடக்கூடாது என்று கூறவே அலுவலக முன்புறம் வந்து முற்றுகை செய்தனர்.

பணிச்சுமையை குறைக்க பணியாளர்களை அதிகப்படுத்துதல், பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், பாதுகாப்பு உபகாரனங்கள் வழங்க கோரி முழக்கமிட்டனர்.

முற்றுகை செய்தவர்களிடம் சுகாதார துறையினர் மற்றும் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தி ரன். அதன்பின்பு முற்றுகையை கைவிட்டு  ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்து கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 30 வரை நீட்டிப்பு!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருடியவர் கைது!

ஞானவாபி, மதுராவில் கோயில் கட்டுவோம்: அஸ்ஸாம் முதல்வர் சர்ச்சை

அந்தமானில் சூர்யா - 44 படப்பிடிப்பு?

தங்கம் விலை: பவுனுக்கு ரூ.280 உயர்வு

SCROLL FOR NEXT