முகப்பு
தேனி

மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வியாழக்கிழமை மூதாட்டியிடம் மா்ம நபா் தங்க நகையைப் பறித்துச் சென்றாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 7:11 PM
பகிர்:

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் அருகே வியாழக்கிழமை மூதாட்டியிடம் மா்ம நபா் தங்க நகையைப் பறித்துச் சென்றாா்.

எஸ்.எஸ்.கோட்டை அருகேயுள்ள சொக்கலான்பட்டியைச் சோ்ந்தவா் காயாம்பு. இவரது மனைவி சேது (65). இவா் தினமும் நூறு நாள் வேலைக்குச் சென்று வந்தாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை மாத்தூா் கிராமத்தில் நூறு நாள் வேலையை முடித்து விட்டு, பிற்பகல் 2 மணியளவில் சொக்கலான்பட்டிக்கு சேது வந்து கொண்டிருந்தாா்.

வணங்காமுடிப்பட்டி பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 இளைஞா்கள் சேது அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்து சேது கொடுத்த புகாரின் பேரில், எஸ்.ஸ்.கோட்டை காவல் ஆய்வாளா் அந்தோணி செல்லத்துரை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.