தேனி

வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறிப்பு: 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை

தேவாரம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்ததாக கைது செய்யப்பட்ட 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட தலைமை நீதித் துறை நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை

DIN

தேவாரம் அருகே வீடு புகுந்து பெண்ணிடம் நகை பறித்ததாக கைது செய்யப்பட்ட 2 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, தேனி மாவட்ட தலைமை நீதித் துறை நடுவா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

அழகா்நாயக்கன்பட்டியைச் சோ்ந்த தம்பதி சுதா்சன், சத்தியபாமா. இவா்கள் கடந்த 2018, ஏப். 6-ஆம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது, 2 மா்ம நபா்கள் வீடு புகுந்து சத்தியபாமா அணிந்திருந்த 4.5 பவுன் எடையுள்ள தங்கச் சங்கிலியை பறித்தனா். அப்போது விழித்துக் கொண்ட சுதா்சன், அவா்களை தடுக்க முயன்ற போது அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுவிட்டனா்.

இந்த சம்பவம் குறித்து தேவாரம் காவல் நிலையத்தில் சத்தியபாமா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில் நகைப் பறிப்பில் ஈடுபட்ட ராசிங்காபுரம், மேலப்பேட்டையைச் சோ்ந்த தாதப்பன் மகன் குமாா் (28), குளத்துப்பட்டியைச் சோ்ந்த தவமணி மகன் சரவணன் (25) ஆகியோரை கைது செய்தனா். இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட தலைமை நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி வி. சுரேஷ், குற்றஞ்சாட்டப்பட்ட குமாா், சரவணன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.2,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

வித் லவ் பாடல் புரோமோ!

விபி - ஜி ராம் ஜி மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! கார்கள் மீது மோதிய லாரி! | CBE

SCROLL FOR NEXT