தேனி

பக்ரீத் பண்டிகை: போடியில் இஸ்லாமியர்கள் தொழுகை

DIN

போடி: போடியில் வியாழக்கிழமை, பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லீம்கள் தொழுகை நடத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

நாடு முழுவதும் முஸ்லீம்கள் ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகையை கொண்டாடி வருகின்றனர். போடியில் பெரியபள்ளி வாசல், வடக்கு பள்ளி வாசல், டி.வி.கே.கே. நகர் பள்ளி வாசல், மேலத்தெரு அம்மாகுளம் பள்ளிவாசல் ஆகிய பள்ளிவாசல்களில் தொழுகை நடத்தப்பட்டது.

புதூர் பள்ளிவாசலில் கூட்டுத் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடி தொழுகை நடத்தினர். உலகில் நோய் தொற்று தீரவும், பொதுமக்கள் நலமுடன் வாழவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முஸ்லீம்கள் புத்தாடை உடுத்தி, நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஈகை திருநாளை நினைவு கூறும் வகையில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நடிகர் சித்தார்த்தின் 40 வது படம்!

காதலி இறந்த சோகத்தில் சீரியல் நடிகர் தற்கொலை!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: பிபவ் குமார் கைது!

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

SCROLL FOR NEXT